சென்னையில் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களில் கொட்டப்பட்டுள்ள மரக் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
“வார்தா” புயல் கடந்த மாதம் 12-ம் தேதி சென் னையை தாக்கியது. இதில், பல ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. தொடர்ந்து பல இடங்களில் மின் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து வருவாய், மாநகராட்சி, காவல்துறை உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். வெளி மாவட்டத்தில் இருந்தும் ஊழியர்கள், காவலர்கள் வரவழைக்கப்பட்டனர்.
54 இடங்கள் தேர்வு
சென்னையில் சேகரிக்கப் பட்ட மரக் கழிவுகள் கொடுங்கை யூர், பெருங்குடி, பள்ளிக் கரணை உள்ளிட்ட குப்பை கிடங்குகளில் கொட்டப்பட்டன. இதுபோக விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள் என 54 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மரக் கழிவுகள் தற்காலிகமாக கொட்டி வைக்கப்பட்டன.
இந்த குப்பைகள் பல்வேறு இடங்களில் இன்னமும் அகற்றப் படாமல் அப்படியே உள்ளன. குறிப்பாக பாண்டிபஜார் பனகல் பூங்கா, கோபாலபுரம் விளையாட்டு மைதானம், பூந்த மல்லி, அடையார், திருமங்க லம், ஆர்.ஏ.புரம் உட்பட சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் பல்வேறு விளையாட்டு மைதானம், பூங் காக்களில் மரக் கழிவு குப்பை கள் இன்னமும் அகற்றப்படாமல் உள்ளன.
இதுகுறித்து, பாண்டி பஜா ரைச் சேர்ந்த வெங்கட் குமார் (28) என்பவர் கூறும்போது, “விளையாட்டு மைதானங் களில் மரக் கழிவுகள் கொட்டப் பட்டுள்ளதால் இளைஞர்கள், மாணவர்கள், பெரியவர்கள் என பல தரப்பினரும் பாதிக்கப் பட்டுள்ளனர்.
விடுமுறை நாட்களில் மாணவர்கள் மாநகராட்சி விளை யாட்டு மைதானத்தில்தான் பெரும்பாலும் விளையாடு வார்கள். அது தற்போது தடுக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் வீட்டிலேயே முடங் கும் சூழல் ஏற்பட்டுள்ளது” என்றார்.
அடையாரை சேர்ந்த ரமேஷ் (31) கூறும்போது, “நடை பயிற்சி பகுதியாக பூங்காக் களும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உடல்திறன், விளையாட்டு திறனை அதிகப் படுத்தும் பகுதியாக மாநகராட்சி விளையாட்டு மைதானங்களும் இருந்து வருகின்றன. தற்போது, இங்கு கொட்டப்பட்டுள்ள மரக் கழிவுகளால் அனைத்து தரப் பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
போகி பண்டிகை
இன்னும் இரண்டு வாரத்துக் குள் போகி பண்டிகை வர உள்ளது. இந்த நேரத்தில் பழைய பொருட்களை எரிக் கிறோம் என்ற பெயரில் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கொட்டப்பட் டுள்ள மரக் கழிவுகளை கொளுத்தி விட்டால் பெரிய அளவில் விபத்து ஏற்பட வாய்ப் புள்ளது. எனவே, அதற்குள் மரக் கழிவுகள் அனைத்தையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.