தமிழகம்

ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு காமாட்சி விளக்கு கொடுத்த 3 பேர் கைது

செய்திப்பிரிவு

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக் காளர்களுக்கு காமாட்சி விளக்கு கள் கொடுத்த 3 பேர் கைது செய் யப்பட்டனர். அவர்கள் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக் காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுக்கப்படுகிறதா என்று பறக்கும் படையினர் தீவிர மாக கண்காணித்து வருகின்றனர். 24 மணி நேரமும் சுழற்சி முறை யில் ரோந்துப் பணி முடுக்கிவிடப் பட்டுள்ளது.

இந்நிலையில், 40-வது வார்டு திருவள்ளுவர் குடியிருப்பில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படுவதாக பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அதிகாரி மோகன் தலைமையில் பறக்கும் படையினர் விரைந்தனர். புது வண்ணாரப்பேட்டை போலீஸாரும் வந்தனர். அங்கு வாக்காளர் களிடம் காமாட்சி விளக்குகளைக் கொடுத்த 2 பேரை பிடித்தனர்.

விசாரித்ததில், அவர்கள் திரு வண்ணாமலையை சேர்ந்த சிவக் குமார் (38), பிரசன்னா (27) என்பது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆர்.கே.நகர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த கோபிநாத் (32) என்பவரும் பிடிபட்டார். அவர்களிடம் இருந்து 15 காமாட்சி விளக்குகள் கைப் பற்றப்பட்டன. இவற்றை விநி யோகிக்கப் பயன்படுத்தப்பட்ட 2 கார்கள், ஒரு மொபட்டும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப் பட்டவர்கள் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது.

ஆர்.கே.நகரில் பணம் விநியோகம் செய்த கருணாமூர்த்தி என்ற டெய்லர் 2 நாட்களுக்கு முன்பு கைது செய்யப் பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT