அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்த்த அனுபவம் குறித்து தொண்டர் களுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத் தில் கூறியிருப்பதாவது: போராடி கிடைத்த வெற்றியை கொண்டாடும் வகையில்தான் பிப்ரவரி 10-ம் தேதி அலங்காநல்லூரில் உற்சாக திருவிழாவாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இளை ஞர்கள், மாணவர்கள் போராட்ட வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்க வும், அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை காணச் சென்றேன். வாடிவாசல் திறக்கப் பட்டு சீறி வந்த காளைகளையும், அதன் மீது பாய்ந்து அடக்கிய காளையர்களையும் பார்க்க பார்க்க பரவசமாக இருந்தது. மனிதனுக்கும் விலங்குக்குமான உறவை விளக்கும் விளையாட்டாக அந்த போட்டிகளைக் காண முடிந்தது. சாதி ஏற்றத்தாழ்வுகளற்ற விளையாட்டு போட்டியாக ஜல்லிக் கட்டு நடைபெற்றது. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களுக்கு விளையாட்டு காட்டி அவர்களின் பிடியிலிருந்து தப்பித்த காளைகளை வளர்த்தவர்களுக்கும் பரிசு வழங்கும் வாய்ப்பையும் அலங்காநல்லூர் மக்கள் எனக்கு அளித்தார்கள். தடைகளைத் தகர்த்து நடைபெற்ற போட்டிகளில் வென்றவர்களுக்கு கிடைத்தவை ஊக்கப் பரிசுகள்தான். அதனை உள்ளன்புடன் ஏற்றுக்கொண்டனர். கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு தனிப்பட்ட முறையில் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அதுபோல நமது மண்ணின் பெருமை சொல்லும் ஏறுதழுவுதல் போட்டியில் பங்கேற்கும் வீரமிக்க இளைஞர்களுக்கும், காளை வளர்ப்போருக்கும் அனைவரும் கவனிக்கும்படியான பெருமைமிக்க பட்டங்களும் பரிசுகளும் வருங்காலத்தில் தரப்பட வேண்டும் என விரும்புகிறேன். அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வேன் என உறுதியளித்து, ஜல்லிக்கட்டு நடைபெற காரணமாக இருந்த இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.