மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் சுமார் ரூ.16 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக கிரானைட் குவாரிகளில் முறைகேடு நடந் திருப்பதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அறிக்கை தாக்கல் செய்தார். இதுகுறித்து, போலீஸார் 98 வழக்குகள் பதிவு செய்து கிரானைட் நிறுவன அதிபர்கள் பலரை கைது செய்தனர். தனி யாருக்கு சொந்தமான இடங்களில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப் புள்ள கிரானைட் கற்களை அரசு டமையாக்க அனுமதி கோரி அப்போதைய மதுரை ஆட்சியர் சுப்பிரமணியன் மேலூர் நீதிமன் றத்தில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகளை தாக்கல் செய்தார்.
இதில் சில வழக்குகளில் உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்திருந்ததால், விசாரணை நடைபெறாமல் இருந்தது. போலீஸார் தொடர்ந்திருந்த 26 வழக்குகளின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சமீபத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீக்கியது. இதனையடுத்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் பணி தொடங்கியது.
மேலூர் நீதிமன்றத்தில் பிஆர்பி கிரானைட் நிறுவனத்தின் மீது தொடரப்பட்ட 3 வழக்குகளில் 4,553 பக்க குற்றப்பத்திரிகை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், பிஆர்பி கிரானைட் நிறுவனம் அரசுக்கு ரூ.1,089 கோடியே 17 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு சிறப்பு வழக்கறிஞர் ஷீலா, காவல்துறை சிறப்பு விசாரணை பிரிவு ஆய்வாளர்கள் ராஜாசிங், பிரகாஷ், முத்துப்பாண்டி ஆகியோர் நீதிபதி (பொறுப்பு) விக்னேஷ் மதுவிடம் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
குற்றப்பத்திரிகை விவரம்
கீழவளவு அருகே நவக்குடி கண்மாயில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அரசு இடத்தைச் சேதப்படுத்தி ரூ.119.84 கோடி இழப்பு, நாவினிப்பட்டி அருகே அரசு இடத்தில் கிரானைட் கற் களை வெட்டி எடுத்து அரசுக்கு ரூ.1.28 கோடி இழப்பு, கீழவளவு அருகே அரசு நிலத்தில் அனுமதி இன்றி கிரானைட் கற்களை வெட்டி எடுத்து ரூ.968.05 கோடி முறை கேடு என மொத்தம் 4,553 பக்கங் கள் கொண்ட குற்றப்பத்திரிகை பிஆர்பி நிறுவனங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டது.
கிரானைட் கற்களை அரசுடமை யாக்க அனுமதி கோரி ஆட்சியர் தொடர்ந்த 42 வழக்குகளின் மீதான விசாரணையை ஜுலை 19-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.