தமிழகம்

தொழில் உரிமம் புதுப்பிக்க அவகாசம் தேவை

செய்திப்பிரிவு

எந்தவித அபாரதமும் இன்றி தொழில் உரிமம் புதுப்பிக்க ஏப்ரல் 30 வரை கால அவகாசம் வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தொழில் உரிமம் புதுப்பிக்கும் அறிவிப்பை சென்னை மாநகராட்சி இம்மாதத்தில்தான் வெளியிட்டது. ஏற்கெனவே, சென்றமுறை தொழில் உரிமம் செலுத்திய ரசீது மற்றும் அதற்குரிய தொகைக்கான டிடி-யுடன் சென்ற வணிகர்கள் அந்தந்த மண்டல அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டனர். குறிப் பாக, அம்பத்தூர் மண்டலத்தில் தொழில் உரிம கட்டணங்களை அரசு ஆணைக்கு புறம்பாக பல மடங்கு உயர்த்தி கட்ட வேண்டும் என்று கூறி உரிமத்தைப் புதுப்பிக்காமல் திருப்பி அனுப்பினர்.

தொழில் வரி என்பது வணிகர் களுக்கு கிடைக்கும் வருமான அடிப்படையிலே சிலாப் வாரி யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வணிகர்கள் கூறும் வருமானத்தை ஏற்றுக்கொண்டு தொழில் வரி கட்டணங்களைப் பெற வேண்டும். அதிகாரிகளின் கெடுபிடி நடவடிக் கைகளால் மார்ச் 31-க்குள் அனைத்து வணிகர்களும் தொழில் உரிமம் புதுப்பிக்க இயலாது. மேலும் தொழில் உரிமத்தின் காலக் கெடு ஏப்ரல் 30 வரை உள்ளது. எனவே, ஏப்ரல் 30 வரை எந்தவித அபராதமும் இன்றி தொழில் உரிமம் புதுப்பிக்க கால அவகாசம் வழங்க சென்னை மாநக ராட்சி ஆணையர் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT