தமிழகம்

மனித கடத்தலுக்கு எதிராக புதிய முகநூல் பக்கம் திறப்பு

செய்திப்பிரிவு

சமூக வலைதளங்கள் மூலமும் மனித கடத்தலை தடுப்போம் என்ற முழக்கத்துடன் கடத்தலுக்கு எதிரான முகநூல் பக்கம் சென்னை யில் நேற்று தொடங்கப்பட்டது. இதைப் பயன்படுத்தி மனித கடத்தலை தடுப்பதற்கான விழிப்புணர்வு செயல்பாடுகளில் மக்கள் ஈடுபட வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட பிரிவும் எம்சிசிஎஸ்எஸ் அமைப்பும் இணைந்து கல்லூரி வளாகத்தில் நேற்று மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியை நடத்தியது. இதில் எம்சிசிஎஸ்எஸ் நிர்வாக செயலாளர் இசபெல் பேசியதாவது:

பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி காதலிப்பதாக ஏமாற்றுவது, வேலை வாங்கித் தருவதாக கூறி ஊரைவிட்டு அழைத்து வருவது போன்ற செயல்களுக்கு தற்போதும் பெண்கள் பலியாகி வருகின்றனர். அவர்களை அழைத்து வருபவர், பின்னர் அவர்களை விற்பவர் என இரு வகையான மனிதர்களால் தங்களின் சொந்த அடையாளத்தை அபலைப் பெண்கள் இழக்கின்ற னர். எனவே பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். படிப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட வேண் டும். இவ்வாறு அவர் பேசினார்.

கல்லூரி முதல்வர் ராதா பேசும்போது, 'ஒரு நபரை ஆசை வார்த்தைகளோ அல்லது வேறு பல காரணங்களையோ கூறி ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்துக்கு கொண்டு செல்வதே மனித கடத்தல். நிறுவனமயமாக்கப்பட்ட குற்றச் செயல்களுக்கு எதிராக பெண்கள் விழிப்புணர்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வெறும் பாலியல் ரீதியான பயன்பாட்டுக்கு மட்டும் அல்லாமல் மனித உறுப்பு களை விற்பதற்கும் பெண்க ளும் குழந்தைகளும் கடத்தப்படுகி றார்கள்' என்று வேதனை தெரிவித் தார்.

இந்நிகழ்ச்சியில் மனித கடத்தலுக்கு எதிராக prevention of trafficking என்ற முகநூல் பக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. இதைப் பயன்படுத்தி தங்கள் கவனத்துக்கு வரும் மனித கடத்தலைத் தடுக்கும் விழிப்புணர்வு கருத்துகள் மற்றும் செய்திகளை பதிவிடலாம். இந்நிகழ்ச்சியில், கடத்தல் தொடர்பான குறும்படம் திரையிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு எம்சிசிஎஸ்எஸ் திட்ட இயக்குநர் அலெக்ஸாண்டர் தலைமை தாங்கினார். கல்லூரி என்எஸ்எஸ் திட்ட அலுவலர் கல்பனா, ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் உதவி ஆசிரியர் பா.அசோக், ஸ்மிருதி, ஆஸ்கர் மற்றும் எரிக் மற்றும் நூற்றுக்கணக்கான மாணவிகள் இதில் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT