கோவையில் எதிர்ப்பை மீறி அமைக்கப்பட்ட மதுக்கடைக்குள் இரவோடு இரவாக புகுந்த மக்கள், அங்கிருந்த மதுபாட்டில்களை உடைத்து சேதப்படுத்தினர்.
கோவையிலிருந்து கேரளம் செல்லும் ஆனைகட்டி சாலையில் உள்ள குண்டுபெருமாள் கோயில் அருகே மதுக்கடை ஒன்று செயல் பட்டு வந்தது. நீதிமன்ற உத்தர வுக்குப் பிறகு அந்த மதுக்கடை மூடப்பட்டது. சின்னத்தடாகம் அடுத்துள்ள நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பாப்பநாயக்கன் பாளையத்தில் அந்த மதுக்கடை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனிடையே பொதுமக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரி கள், மதுக்கடை அமையாது என உறுதியளித்தனர். ஆனால் அதற்கு மாறாக பாப்பநாயக்கன்பாளை யத்தில் மதுக்கடை திறக்கப்பட்டது.
சின்னத்தடாகம், பாப்பநாயக் கன்பாளையத்தில் மட்டுமே மதுக் கடைகள் இருப்பதால் சுற்றுவட் டார கிராமத்தினர் மட்டுமல்லாது கேரளத்தில் இருந்தும் ஏராள மானோர் இங்கு வந்து செல்கின் றனர். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாகவும், வனத்தை ஒட்டி இருப்பதால் மனித - விலங்கு மோதல் ஏற்படும் எனவும் மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு மதுக்கடையை முற்றுகையிட்டனர். கடை மூடும் நேரம் என்பதால் ஊழியர்கள் கணக்கை சரிபார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென உள்ளே புகுந்த மக்கள், கடையின் உள்ளே வைத்திருந்த மதுபாட்டில்களை வெளியே எடுத்து வீசி உடைத்தனர். இந்த சம்பவத்தில் கடையில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. கடை ஊழியர்கள் 2 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த துடியலூர் போலீஸார், குணசேகரன் (50), ஆனந்த் (38), பாலாஜி (30) ஆகிய 3 பேரைக் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடையவர்களைத் தேடி வருகின்றனர்.
போலீஸார் கூறும்போது, ‘ரூ.2.44 லட்சம் மதிப்புடைய 2137 மது பாட்டில்கள் உடைக்கப்பட்டுள்ளன. மேலும் காயமடைந்த ஊழியர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என்றனர்.
4 பேர் கைது
பொள்ளாச்சியை அடுத்த திப்பம்பட்டி பூங்கா நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அங்கு இருந்த 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை உடைத்து எறிந்தனர். இது குறித்து டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் சுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கோமங்கலம் போலீஸார் திப்பம்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன் (31), குமாரசாமி (48), செல்வகுமார், முரளிதரன் (21) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.