ராஜஸ்தானில் பசு பாதுகாவலர் கள் அமைப்பினரால் தாக்குதலுக் குள்ளான சிவகங்கை மாவட்ட கால்நடைப் பராமரிப்புத் துறை அதிகாரிகள் ராஜஸ்தான் மாநில தார்பார்க்கர் இன பசுக்களை செட்டி நாடு அரசு கால்நடைப் பண்ணைக்கு நேற்று கொண்டு வந்தனர்.
இந்திய மாட்டினங்கள் அழியா மல் பாதுகாக்கும் வகையில் தேசிய கால்நடை அபிவிருத்தி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வரு கிறது. இத்திட்டத்தின்கீழ் ராஜஸ் தான் மாநிலம் தார்பார்க்கர் மாடுகளை இன விருத்தி செய்யும் பணியை செட்டிநாடு அரசு கால்நடைப் பண்ணைக்கு ஒதுக்கி உள்ளது. போதிய நீராதாரத்துடன் 1,500 ஏக்கர் பரப்பளவு உள்ள இப் பண்ணையில் இரண்டாவது முறை யாக தார்பார்க்கர் மாடுகள் ராஜஸ் தானில் கொள்முதல் செய்யப் பட்டுள்ளன.
இந் நிலையில், தார்பார்க்கர் பசு மாடுகளை கொள்முதல் செய்வ தற்காக குழுத் தலைவர் தஞ்சாவூர் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் மாசிலாமணி தலைமையில் கால்நடை அதிகாரி கள் கடந்த 11-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் சென்றனர்.
அங்கு 50 தார்பார்க்கர் பசு மாடுகளை வாங்கிக் கொண்டு செட்டிநாடு கால்நடைப் பண் ணைக்கு கொண்டுவர 5 டிரக்கு களை ஏற்பாடு செய்தனர்.
கடந்த 11-ம் தேதி மாலை பசு மாடுகள் ஏற்றப்பட்ட டிரக்குகளில் செட்டிநாடு பண்ணை துணை இயக்குநர் முருகேசன், டாக்டர் அரவிந்த்ராஜ், பண்ணை ஊழியர் கள் 5 பேர் வந்துள்ளனர். பார்மர் மாவட்டத்தில் வரும்போது பசுக் களை கடத்துவதாகக் கூறி ‘பசு பாதுகாவலர்கள்’ எனும் அமைப் பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் டிரக்குகளை சூழ்ந்து கல்வீசித் தாக்கினர். கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தினர்.
இந் நிலையில், ராஜஸ்தானில் இருந்து ஒரு வாரப் பயணத்துக்குப் பிறகு செட்டிநாடு அரசு கால்நடைப் பண்ணைக்கு தார்பார்க்கர் பசுக் களை 5 டிரக்குகளில் நேற்று பாதுகாப்புடன் கொண்டு வந்து சேர்த்தனர். இவர்களை சிவகங்கை மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் கருணா கரன், தஞ்சாவூர் மாவட்ட இணை இயக்குநர் மாசிலாமணி ஆகியோர் வரவேற்றனர்.
இது குறித்து சிவகங்கை மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் கருணாகரன், கூறியதாவது:
மத்திய அரசின் தேசிய கால்நடை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் நமது பண்ணையில் ராஜஸ்தான் மாநிலத்தின் தார்பார்க்கர் மாடுகள் இனவிருத்தி செய்யப்படுகின்றன. இது வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய இனம். இதற்காக ஒரு மாட்டுக்கு அரசு நிர்ணய விலை ரூ.60 ஆயிரம் வீதம் 50 மாடுகளை வாங்குவதற்கு ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் தீவனச் செலவு, போக்குவரத்துச் செலவு, மூன்றரை லட்சத்தில் கொட்டகை அமைப்பதற்கான செலவு உட்பட ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன.
முதலில் ஈன்ற மாடும் கன்றும், சினை மாடுகளும் வாங்கப்பட்டுள் ளன. வாங்கப்பட்ட 50 மாடுகளில் ஒரு மாடு அங்கேயே காணாமல் போனதால் 49 மாடுகள் வந்துள்ளன. காணாமல்போன மாடு குறித்து ராஜஸ்தான் மாநில போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர் என்றார்.