தமிழகம்

கணவர் தற்கொலை வழக்கில் நடிகை நந்தினியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

செய்திப்பிரிவு

கணவர் தற்கொலை செய்த வழக் கில் சின்னத்திரை நடிகை நந்தினி மற்றும் அவரது தந்தை தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை நீதி மன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

நடிகை மைனா என்ற நந்தினி யும், சென்னை தி.நகரில் உடற் பயிற்சி கூடம் நடத்தி வரும் கார்த்தி கேயனும் காதலித்து கடந்த 2016-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையி்ல் கருத்து வேறுபாடு காரணமாக நந்தினி தனது தந்தையுடன் வசித்து வந்தார். இதில் மனமுடைந்த கார்த்தி கேயன், கடந்த 3-ம் தேதி விருகம் பாக்கத்தில் உள்ள விடுதி ஒன்றில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக விருகம்பாக்கம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் நந்தினியும், அவரது தந்தை ராஜேந்திரனும் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசா ரணை நேற்று முதன்மை அமர்வு நீதிபதி நசீமாபானு முன் நடந்தது. அப்போது பெருநகர அரசு குற்றவி யல் வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் ஆஜராகி, கார்த்திகேயனின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகுதான் இந்த வழக்கின் உண்மையான நிலை தெரியவரும். ஆனால் அதற்குள் மனைவி மற்றும் மாமனார் முன்ஜாமீன் கோரியுள்ள னர். எனவே அவர்களுக்கு முன் ஜாமீன் அளிக்கக்கூடாது என வாதிட்டார்.

இதையடுத்து அவர்களின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT