மாமல்லபுரம் அருகே மர்மமான முறையில் கார் எரிந்ததில் மூவர் நேற்று இரவு உயிரிழந்தனர்.
மாமல்லபுரம் - கல்பாக்கம் இடையே உள்ளது மனமை கிராமம். இங்கு ரியல் எஸ்டேட்டுக் காக ஒரு மனைப்பிரிவு உருவாக் கப்பட்டிருந்தது. இந்த மனைப் பிரிவில் நேற்று இரவு கார் ஒன்று திடீரென்று தீப்பற்றி எரிந்தது. அருகே உள்ளவர்கள் இதுகுறித்து உடனடியாக மாமல்லபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வாகனம் வருவதற்குள் அந்த கார் முற்றிலும் எரிந்துவிட்டது.
காரை திறந்து பார்த்தபோது, உள்ளே கருகிய நிலையில் 2 ஆண், ஒரு பெண் சடலம் இருந்தன.
அந்த கார் எப்படி எரிந்தது என்பது தெரியவில்லை. எதிர் பாராதவிதமாக தீப்பற்றிக் கொண்டதா, யாரேனும் தீவைத்து எரித்துள்ளனாரா என்ற கோணத் தில் மாமல்லபுரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
குரோம்பேட்டையை சேர்ந்தவர்களா?
காரில் இருந்தவர்கள் குரோம் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் களாக இருக்கலாம் என்று போலீ ஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், இறந்தவர்கள் குறித்த விவரங்கள் உறுதியாகத் தெரியவில்லை. இதுகுறித்து மாமல்லபுரம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.