ஐடி பொறியாளர் உமா மகேஸ் வரி கொலை செய்யப்பட்ட வழக் கில் ஆயுள் தண்டனை விதிக்கப் பட்ட வடமாநில இளைஞர்கள் 3 பேரிடம் உயர் நீதிமன்ற நீதிபதி கள் நேற்று விசாரணை நடத்தினர்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐடி பொறியாளர் உமா மகேஸ்வரி(23). இவர் சென் னையை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ம் தேதி வேலைக்குச் சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கேளம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் அதே ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி சிப்காட் வளாகத்தில் உள்ள முட்புதர் ஒன் றில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு உமா மகேஸ் வரி சடலமாக மீட்கப்பட்டார்.
உமா மகேஸ்வரியின் செல் போன் மற்றும் கிரெடிட் கார்டு போன்றவற்றை வைத்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உத்தம் மண்டல்(23), ராம் மண்டல்(22), உஜ்ஜல் மண்டல்(23) ஆகி யோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றம் 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து 3 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசா ரணை நீதிபதிகள் எஸ்.நாக முத்து, வி.பாரதிதாசன் ஆகி யோர் அடங்கிய அமர்வில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் ஆஜரான சிபிசிஐடி பெண் போலீஸ் அதிகாரியிடம் சரமாரியாக கேள்விகளை கேட்ட நீதிபதி கள், இந்த வழக்கில் போலீஸார் டிஎன்ஏ பரிசோதனைகூட செய்யாமல் மெத்தனப்போக் குடன் செயல்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று நீதிபதி கள் முன்பாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் 3 பேரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர் களிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது நீதிபதி கள் கேட்ட கேள்விகளை ஒருவர் அவர்களுக்கு ஹிந்தியில் மொழிபெயர்த்துச் சொன்னார். அதற்கு அவர்கள் பதில் அளித்தனர். அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த மேல்முறையீட்டு மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.