தமிழகம்

மெரினா கடலில் குளித்த கல்லூரி மாணவர் இருவர் பலி

செய்திப்பிரிவு

மெரினா கடலில் குளித்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் ராட்சத அலையில் சிக்கி இறந்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த பொறியியல் மாணவர்கள் குருமூர்த்தி, கோபிநாத், கோகுல், மோகன்ராஜ் உட்பட 11 பேர் சென்னை அம்பத்தூரில் உள்ள உறவினர் நிகழ்ச்சிக்காக நேற்று வந்தனர். பிற்பகலில் மேற்கண்ட 4 பேரும் மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அருகே கடலில் குளித்தனர். அப்போது ராட்சத அலையில் அவர்கள் சிக்கினர்.

உயிருக்கு போராடிய கோபிநாத் மற்றும் கோகுலை அங்கிருந்தவர்கள் காப்பாற்றினர். குருமூர்த்தி, மோகன்ராஜ் ஆகியோரின் உடல்கள் சிறிது நேரத்தில் கரை ஒதுங்கின. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆவடி

பிஹார் மாநிலத்தை சேர்ந்தவர் ஆனந்த்குமார்(26). இவர் ஆவடி ராணுவப் பயிற்சி மையத்தில் குமாஸ்தாவாக பணியாற்றி வந் தார். அவருடைய உறவினர் வீட்டுக்கு நேற்று இருசக்கர வாகனம் மூலம் சென்றபோது, அன்னனூர் ரயில் நிலையம் அருகே கேட் மூடியிருந்த போதிலும் கடக்க முயன்றுள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த மின்சார ரயில் மோதியது. இதில், இருசக்கர வாகனம் தூக்கி ஏறியப்பட்டது. ஆனந்த்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது தொடர்பாக ஆவடி ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT