தமிழகம்

தமிழகத்தில் ‘நவோதயா’ பள்ளிகளை திறக்க வேண்டும்: பாரிவேந்தர் கோரிக்கை

செய்திப்பிரிவு

ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

சிவில் சர்வீஸ் உள்ளிட்ட அனைத்திந்திய தேர்வுகளில் தமிழக மாணவர்கள் பின்னுக்கு தள்ளப்படுகின்றனர். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு, அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையில், தேசிய அள வில் நடத்தப்பட்ட 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வில், தமிழக மாணவர்கள் 28-வது இடத் துக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே தமிழக பாடத் திட்டம், தேசிய அளவுக்கு மாற்றப்படவில்லை என்பது தெளிவாகிறது.

தேசிய அளவிலான பாடத் திட்டத்தின் கீழ் செயல்படும் ‘நவோதயா’ பள்ளிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் செயல்படு கின்றன. அதில் பயிலும் மாண வர்களுக்கு, கல்வி கட்டணம், தங்கும் விடுதிகள், பாடநூல்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன. அதில் தாய் மொழி, ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுடன் இந்தி மொழியும் கற்பிக்கப்படுகிறது. இந்தி பாடத் தில் தேர்வு பெற்றால்தான் மேல் வகுப்புக்கு செல்ல முடியும் என்ற கட்டாயம் இல்லை. இந்தி திணிப்பு என்ற பெயரில் இதை எதிர்க்கும் கட்சிகளால், ‘நவோதயா’ பள்ளிகள் தமிழ்நாட்டில் மட்டும் செயல்படவில்லை.

எனவே நவீன பாடத் திட்டத்தின் கீழ் செயல்படும் நவோதயா பள்ளி களை தமிழகத்தில் குறைந்தபட்சம் மாவட்டத்துக்கு ஒன்று வீதம் திறக்க தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

SCROLL FOR NEXT