தமிழகம்

ஸ்டாலின் மீதான வழக்கு விசாரணை தள்ளி வைப்பு

செய்திப்பிரிவு

மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணை ஆகஸ்டு மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் 3-ம் தேதி சென்னையில் நடந்த ‘நமக்கு நாமே’ நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து தமிழக அரசை குற்றம் சாட்டி அவதூறாக பேசியதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஸ்டாலின் நேற்று ஆஜராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக எதிர்கட்சித் தலைவராக பதவி வகிக்கும் மு.க.ஸ்டாலின், சட்ட மன்றக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டியிருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என மனுதாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன், விசாரணையை ஆகஸ்டு 2-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

SCROLL FOR NEXT