தமிழகம்

‘அஷோபா’ புயல் ஆந்திர கரையை நாளை கடக்கும்

செய்திப்பிரிவு

‘அஷோபா’ புயல் நவம்பர் 8-ம் தேதி ஆந்திர கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலின் மத்திய பகுதியில் நிலை கொண்டிருந்த காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 24 மணி நேரத்தில் ‘அஷோபா’ என்ற தீவிர புயலாக மாறியுள்ளது.

இது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து தென் கிழக்கே 560 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, நவம்பர் 8-ம் தேதி ஆந்திர மாநில கரையை கடக்கும். இதனால், ஆந்திராவில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நேற்று காலை 8.30 வரை பதிவான மழை நிலவரப் படி கன்னியா குமரி மாவட்டம் பூதப்பாண்டியில் 3 செ.மீ., கீழ்கயத்தாற்றில் 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

SCROLL FOR NEXT