கோவையில் தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசனிடம் மலர் கொடுத்து அநாகரீகமாக நடந்துகொண்டவர் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டார்.
நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, தூய்மை இந் தியா திட்டத்தின் மூலம் கழிப்பிடங் கள் ஏற்படுத்துவதற்கான அடிக் கல் நாட்டு விழா கோவை சுங்கம் அருகில் உள்ள கல்லுக்குழி குடி யிருப்பு பகுதியில் நேற்று காலை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வானதி சீனி வாசன் வந்திருந்தார். விழாவை முடித்துக்கொண்டு கோவை கோனியம்மன் கோயிலில் வழிபாடு செய்தார். பின்னர் வெளியே வந்தபோது கோயில் மண்டபத்தில் நடுத்தர வயதுக்காரர் ஒருவர் வான தியிடம் ரோஜா பூவை கொடுத்து காதலை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது கட்சிக்காரர்கள் அவரை அந்த இடத்தை விட்டு போகுமாறு எச்சரித்துள்ளனர். ஆனால் அவர் குறிப்பிட்ட வார்த்தைகளை கூறிய படியே நின்றிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த தொண்டர்கள் அவரை தாக்கி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
பிடிபட்ட நபரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் அவர் பெயர் முத்துவேலு என்பதும், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ரங்கசாமி என்பவரின் மகன் என்பதும், அவர் கட்சி உறுப்பினர் என்பதும் தெரியவந்துள்ளது.
அவர் மீது வானதி புகார் ஏதும் அளிக்கவில்லை. போலீஸார் அவர் மீது பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டதாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அபராதம் செலுத்திய அவர், எச்சரித்து அனுப்பப்பட்ட தாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து வானதி சீனிவாச னிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியது: தவறு செய்பவர்களுக்கு மட்டுமல்ல இதில் எல்லோருக் குமே சமூகப்பொறுப்பு உள்ளது. பெண் குழந்தைகளிடம், பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண் டும் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.