தமிழகம்

தமிழக அமைச்சர்கள் இலாகா மாற்றம்

செய்திப்பிரிவு

தமிழக அமைச்சரவையில் சில அமைச்சர்களின் துறைகள் இன்று (திங்கள்கிழமை) மீண்டும் மாற்றியமைக்கப்பட்டது.

அமைச்சர் கே.வி.ராமலிங்கம் வசம் இருந்த பொதுப்பணித் துறை, நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக ஆளுநரின் செயலர் வெளியிட்ட செய்தியில், அமைச்சர் கே.வி. ராமலிங்கம் இதுவரை பொறுப்பு வகித்து வந்த பொதுப்பணித் துறை, நீர்ப்பாசனம் மற்றும் திட்டப் பணிகள் ஆகியவற்றை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூடுதலாக கவனிப்பார்.

அமைச்சர் கே.சி. வீரமணி கவனித்து வந்த விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை, அமைச்சர் கே.வி. ராமலிங்கத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனால், பள்ளிக்கல்வி, தொல்லியல் மற்றும் தமிழ் ஆட்சி மொழி ஆகிய துறைகளின் அமைச்சராக கே.சி. வீரமணி தொடர்வார்.

இந்த மாற்றங்கள், முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மாதம் 30-ம் தேதியன்று தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, தமிழகத்தின் சுகாகாரத் துறை அமைச்சராக டாக்டர் சி.விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டார். அத்துறையின் பொறுப்பினை வகித்து வந்த கே.சி.வீரமணி, பள்ளிக் கல்வித்துறைக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT