பெரும்பாக்கம், வேங்கடமங்கலத் தில் குடியிருப்பு பகுதி அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை அடுத்து குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன் தினம் தாம்பரத்தை அடுத்த பெரும்பாக்கம் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று கடையை திறக்கக் கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்து பள்ளிக்கரணை போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தனர். இதையேற்று, அனை வரும் கலைந்து சென்றனர்.
இதேபோல் தாம்பரம் அருகே உள்ள வேங்கடமங்கலம் ஊராட்சி பகுதியில் குடியிருப்பு பகுதியில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். தாழம்பூர் போலீஸார் விரைந்து வந்து கடையை மூட நடவடிக்கை மேற் கொண்டனர்.
இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத் தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.