தமிழகம்

பாலில் கலப்படம் உள்ளதா என்பதை கண்டறிய மாவட்டந்தோறும் ஆய்வு நடத்த உணவு பாதுகாப்புத்துறை திட்டம்

செய்திப்பிரிவு

பாலில் கலப்படம் உள்ளதா என்பதை கண்டறிய தமிழகம் முழுவதும் ஆய்வு நடத்த உணவு பாதுகாப்புத்துறை திட்டமிட்டுள்ளது.

தனியார் பால் உற்பத்தி யாளர்கள், பால் கெட்டுப் போகாமல் பதப்படுத்தி வைப் பதற்காக, உடலுக்குக் கேடு விளைவிக்கும் ரசாய னத்தைக் கலப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் பொது மக்கள் பயன்படுத்தும் பாலில் கலப்படம் ஏதும் உள்ளதா என்பதை அறிய உணவுப் பாது காப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் மதுரை கோ.புதூரில் நேற்றுமுன்தினம் நடந்த பரிசோதனை முகாமில் மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ் முன்னிலையில் பொதுமக்கள் கொண்டு வந்த பால் பரிசோதனை செய்யப்பட்டது.

அதில், ஒரு பால் மாதிரி யில் அதிக நுரை வருவதற் காக சோப்பு ஆயில் கலக் கப்பட்டது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் தலைமையில் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக நடமாடும் இயந்திரம் மூலம் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாலில் ஏதும் கலப்படம் உள்ளதா என்பதை கண்டறிய தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

SCROLL FOR NEXT