சென்னை தியாகராய நகரில் நேற்று நடைபெற்ற திமுக பேச்சாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது ஒரு அசாதாரண சூழல் நிலவுகிறது. பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவின் கட்டுப்பாட்டில் தமிழக அரசு உள்ளது. இதையெல்லாம் மக்களிடம் தெளிவாக எடுத்துக் கூறுமாறு திமுக பேச்சாளர்களுக்கு அறிவுரை சொல்லியிருக்கிறோம்.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை தமிழக அமைச்சர்கள் சிலர் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். அரசாங்கம்தான் கைதிகளை பராமரிக் கும். ஆனால் தமிழகத்தில் தற்போது கைதிகள் அரசாங்கத்தை பராமரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உண் ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அவர் முதல்வராக இருந்தபோதும், காபந்து முதல்வராக இருந்தபோதும் இந்த எண்ணம் வரவில்லை.
காலம் கடந்தாவது இந்த எண்ணம் வந்து அதற்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது பாராட்டுக்குரியது.