தமிழகம்

மின்சார வாரியம் நடத்தும் உதவிப் பொறியாளர் பணிக்கான நேர்காணலை நிறுத்த வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மின்சார வாரியம் நடத்து உதவிப் பொறியாளருக்கான நேர்காணலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மின்சார வாரியத் தில் 375 உதவிப் பொறியாளர் பதவிகளுக்கான நேர்காணல் மார்ச் 13-ம் தேதி (இன்று) முதல் நடைபெறுகிறது. ஏற்கெனவே சென்னையில் நடைபெறுவதாக இருந்தது. தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வந்துவிட்ட தால் இந்த நேர்காணலை மின்சார வாரியம் வண்டலூரில் உள்ள தனியார் விடுதியில் நடத்துகிறது.

நடத்தை விதிகள்

இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவதற்கு பதிலாக தேர்தல் ஆணையத்தை ஏமாற்றும் முயற்சியுமாகும். இதற்கான எழுத்துத் தேர்வுகள் ஏற்கெனவே நடைபெற்று முடிந் துள்ளன. ஆனால் இந்த தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் களை மொத்தமாகவும், அதே சமயம் இட ஒதுக்கீட்டு பிரிவினருக் கான தர வரிசைப்படியும் வெளிப்படையாக பிரசுரித்திருக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் ஒவ்வொரு போட்டியாளரும் தனது மதிப்பெண்ணை மற்றவர்களுடன் ஒப்பிட்டு தனக்கான வாய்ப்பு என்ன என்பதை புரிந்துகொள்ள முடியும்.

ஆனால், மின்சார வாரியம் நடத்திய தேர்வில் ஒவ்வொருவரும் தனித்தனியாக அவர்களது மதிப் பெண்களை மட்டுமே பார்த்துக் கொள்வதற்கான ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

வெளிப்படையாக..

எனவே, உதவிப் பொறியாளருக்கான நேர்முகத் தேர்வை உடனடியாக நிறுத்த வேண்டும். தேர்வு எழுதிய அனை வரின் மதிப்பெண்களை வெளிப் படையாக இட ஒதுக்கீட்டு பிரிவின் அடிப்படையில் வெளியிட்ட பிறகு நேர்முகத் தேர்வை நடத்த வேண்டும் தகுதியானவர்களை நேர்மையான முறையில் நிய மனம் செய்யும் வகையிலும் வெளிப்படைத் தன்மையோடும் இந்த நியமனங்கள் நடைபெற வேண்டும்.

இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT