தமிழகம்

தமிழகம், புதுச்சேரியில் மழை குறையும்: வானிலை ஆய்வு மையம்

செய்திப்பிரிவு

கன்னியாகுமரி அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்ததால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கன்னியாகுமரி அருகே நிலை கொண்டிருந்தது. அது மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து அரபிக் கடலில் வலுவிழந்து உள்ளது.

இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அடுத்த சில நாட்களுக்கு மழை தரும் அளவுக்கு எந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் உருவாக வாய்ப்பில்லை. எனினும் வட தமிழகத்தை விட தென் தமிழகத்தில் சற்று அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 24 மணி நேரத்துக்கு சென்னையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT