தமிழகம்

ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடைபெறும்: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி

செய்திப்பிரிவு

உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடைபெற திமுக முழுமையாக உதவும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டை பார்க்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அலங்காநல்லூர் வந்தார். காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை ஜல்லிக்கட்டை பார்த்தார். திமுகவினர் அமர தனியாக இட வசதி ஏற்படுத்தித் தரப்பட்டது. மாநில துணைப் பொதுச் செய லாளர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந் திரன், தங்கம் தென்னரசு, பெரிய கருப்பன், மாவட்ட திமுக செயலாளர்கள் பி.மூர்த்தி, எம்.மணிமாறன் உட்பட பலர் ஸ்டாலினுடன் ஜல்லிக்கட்டை பார்த்தனர்.

தங்க மோதிரம் பரிசு

காளைகளை திறமையாகப் பிடித்த வீரர்கள், பிடிபடாமல் திறமை காட்டிய காளைகளின் உரிமையாளர்களுக்கு 8 தங்க மோதிரங்களை ஸ்டாலின் பரிசாக வழங்கி ஊக்கப்படுத்தினார்.

முன்னதாக அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி, இங்கு ஜல்லிக்கட்டு நடக்கக் காரணமாக இருந்த மாணவர்கள், இளைஞர்கள் உட்பட போராட்ட குழுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடைபெறும் என்ற சூழல் இன்னும் முடிவுக்கு வராத நிலை உள்ளது. இதுவும் சரி செய்யப்பட்டு, நிரந்தரமாக நடத்தப்படும் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். இதற்கு திமுக என்றும் துணை நிற்கும். நான் அரசியல்வாதியாகவோ, அரசியல் செய்யவோ இங்கு வரவில்லை. அதிமுகவுக்குள் நடக்கும் மல்லுக்கட்டு குறித்து நான் இங்கு கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.

திமுக மகிழ்ச்சி

ஜல்லிக்கட்டை பார்க்க ஸ்டாலின் வரும்போது உரிய மரியாதை, இட வசதி கிடைக் குமா? என்பதை உறுதி செய்ய முடியாமல் திமுகவினர் தவித்தனர். அதிமுகவுக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்கும் வகையில், அதிமுகவினர் தீவிரம் காட்டினர். தமிழக அரசியல் பரபரப்பில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பக்கம் மாணிக்கம் எம்எல்ஏ சென்றார். அமைச்சர் உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் சென்னையை விட்டு வெளியேற முடியவில்லை. இத னால் திமுகவினர் மகிழ்ச்சிடைந் தனர். ஸ்டாலினை ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், கிராமக் கமிட்டியினர் வரவேற்றனர்.

அதிமுகவில் அலங்கா நல்லூர் ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன்தான் முக்கிய பிரமுக ரானார். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

SCROLL FOR NEXT