தமிழகம்

அம்மா உணவகம், பள்ளிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்க சென்னை மாநகராட்சி ஏற்பாடு

செய்திப்பிரிவு

சென்னையில் மாநகராட்சி பள்ளிகள், மருத்துவமனைகள், அம்மா உணவகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிலவேம்பு குடிநீர் வழங்கவும் அதை உறுதி செய் யவும் அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் சில கிராமங்களில் 100-க்கும் மேற் பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக் கப்பட்ட நிலையில், அப் பகுதியில் இறந்த சில குழந்தை களுக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மேயர் சைதை துரைசாமி, ஆணையர் தா.கார்த்தி கேயன் ஆகியோர் மாநகராட்சி பணிகளின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் ஆய்வு மேற்கொண்டனர்.

அதை தொடர்ந்து, டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் வராமல் தடுக்க சென்னை மாநகராட்சி பள்ளிகள், மாநகராட்சி மருத்துவமனைகள், அம்மா உணவகங்கள், குடிசைப் பகுதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு வழங்கவும், அதை உறுதி செய்யவும் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனர்.

SCROLL FOR NEXT