தமிழகம்

ஆளுநருடன் அதிகார போட்டியில்லை; அமைச்சரவை அதிகாரத்தை விட்டுத்தர மாட்டோம்: நாராயணசாமி உறுதி

செய்திப்பிரிவு

புதுச்சேரியில் ஆளுநருடன் அதிகார போட்டி இல்லை. அமைச்சரவையின் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் சட்டப்பேரவை கூட்டம் நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி கூறிய தாவது:

சட்டமன்றத்தில் பங்கேற்று விவாதம் செய்து மக்கள் பிரச்சினைகளுக்காக பேசாமல் புறக்கணித்து வெளியே செல்வது எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரசுக்கு ஏற்புடையதல்ல.

ஐந்து ஆண்டுகள் மக்கள் நல திட்டங்கள் ஏதும் செய்யாமல் உறக்கத்திலிருந்த என்.ஆர்.காங்கிரஸ் 6 மாதங்களாய் சிறப்பாக செயல்படும் காங்கிரஸ் அரசை விமர்சிக்க தகுதி இல்லை.

பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். புதுச்சேரி மாநிலத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து மத்திய அரசிடம் நிதி உதவி கேட்க தீர்மானம் நிறைவேற்றபட்டது.

எதிர்கட்சிகள் தனது கடமையை நிறைவேற்றாமல் வெளிநடப்பு செய்தது வருத்தமளிக்கிறது. மத்திய அரசு வறட்சி நிவாரணமாக தேவையான நிதியை தரும் என்று எதிர்பார்க்கிறோம். காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வறட்சி பாதிப்பு குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தன. பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் எதையும் தெரிவிக்கவில்லை.

எதிர்க்கட்சிகள் அரசின் குறைகளை சுட்டிக் காட்டுவதோடு, உரிய ஆலோசனை களையும் தர வேண்டும். வரும் பிப்ரவரி மாதம் பட்ஜெட் கூட்டத்தின் போது புதுவைக்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கும்.

நிதியை பெறுவதற்காகவே பலமுறை டெல்லி சென்று வருகிறேன். கடந்த 5 ஆண்டுகளாக டெல்லிக்கு செல்லாதவர்கள் இது குறித்து பேச தகுதியில்லை என்று கூறினார்.

நிதியை பெறுவதற்காகவே பலமுறை டெல்லி சென்று வருகிறேன். கடந்த 5 ஆண்டுகளாக டெல்லிக்கு செல்லாதவர்கள் இது குறித்து பேச தகுதியில்லை என்று கூறினார்.

'தனிமாநில அந்தஸ்து பெறவேண்டும்' என்று ரங்கசாமி வலியுறுத்தியுள்ளது தொடர் பாக கேட்டதற்கு, "தனி மாநில அந்தஸ்து கோரிக்கையை மத்தியில் இருந்த கூட்டணி அரசின் மூலம் ரங்கசாமி நிறைவேற்றி இருக்கலாமே" என்று நாராயணசாமி குறிப்பிட்டார்.

ஆளுநர் - அமைச்சர்வை போட்டி தொடர் பாக கேட்டதற்கு, "ஆளுநருடன் அதிகார போட்டி இல்லை. இருப்பினும் அமைச் சர்கள் அவர்களது அதிகாரத்திற்கு உட்பட்டு செயல் படுகிறோம். அதேவேளையில் எங்களது அதிகாரத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்'' என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT