கடந்த 22 நாட்களாக டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை கண்டுகொள்ளாத மத்திய அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஜி.கே.வாசன்:
தமிழகத்தில் நிலவி வரும் கடும் வறட்சியால் இதுவரை 400 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 22 நாட்களாக தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இவற்றையெல்லாம் மத்திய, மாநில அரசுகள் கண்டுகொண்ட தாகவே தெரியவில்லை.
வேல்முருகன்:
கடந்த 22 நாட் களாக டெல்லியில் தமிழக விவசாயி கள் போராடி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு அவர்களுடன் பேச்சு நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாராமுகமாக உள்ளது. எனவே, இனியும் அமைதி காக்காமல் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ள னர்.