புழல் சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பினார்.
கொலை வழக்கில் சிக்கி புழல் சிறையில் கடந்த 2009 முதல் ஆயுள் சிறை கைதியாக அடைக்கப்பட்டிருந்தவர் ஜெயராஜ். புழல் சிறையில் தோட்ட வேலையில் இருந்த அவர் திடீரென மாயமானார்.
நேற்று மாலை சிறை கைதிகளை கணக்கெடுத்தபோது ஜெயராஜ் தப்பியது தெரியவந்தது. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் புழல் காவல் நிலை யத்தில் புகார் தெரிவித்துள்ளனர். போலீஸார் வழக்கு பதிந்து ஜெயராஜை தேடி வருகின்றனர்.