தமிழகம்

பொறியியல் படிப்பு கலந்தாய்வு: பொதுப் பிரிவினருக்கு நாளை தொடக்கம்

செய்திப்பிரிவு

பொறியியல் படிப்புக்கான மாற்றுத் திறனாளிகள் பிரிவினருக்கான கலந்தாய்வு முடிந்தது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 27-ம் தேதி நாளை தொடங்குகிறது.

பொறியியல் படிப்பில் கலந்தாய்வு, சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த விளையாட்டு வீரர் பிரிவினருக்கான கலந் தாய்வில் 352 மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கான ஒதுக்கீட்டு ஆணை பெற்றனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. மாற்றுத்திறனாகள் பிரிவினருக்கு உள்ள 5,760 இடங்களுக்கு ஏராளமானோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

தகுதியான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான ஒதுக்கீட்டு ஆணையை தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் இந்துமதி வழங்கினார். அப்போது தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி ஆணையர் மதுமதி, பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பொறியியல் படிப்பு பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 27-ம் தேதி (நாளை) தொடங்குகிறது.

SCROLL FOR NEXT