மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.66 லட்சம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் சிக்கியது.
திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு மலேசியாவில் இருந்து ஏர் ஏசியா விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத் துறை அலுவலர்கள் சோதனையிட்டு கொண்டிருந்தனர்.
அப்போது 4 பேர் கையில் ஒரே மாதிரி பார்சலுடன் வந்ததை பார்த்த சுங்கத்துறை அலுவலர்கள் சந்தேகமடைந்து அவற்றை பிரித்து சோதனை செய்த போது அந்த பார்சல்களில் பிரிண் டரில் பயன்படுத்தப்படும் டோனர் களுக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த டோனர் களை உடைத்து அதில் இருந்த 2 கிலோ 463 கிராம் தங்கத்தை மீட்டு பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.66.37லட்சம்.
கடத்தலில் ஈடுபட்ட திருச்சி மேலசிந்தாமணியைச் சேர்ந்த நஸ்ருதீன்(54), இப்ராகிம்ஷா (36), ஜபர்லால்(50), அரியமங்கலத்தைச் சேர்ந்த மெகபூப்(28) ஆகிய நால்வ ரிடம் சுங்கத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 21 ம் தேதி திருச்சி விமான நிலைய கழிவறையில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ தங்கம் மீட்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவிலும் 2 கிலோ 463 கிராம் கடத்தல் தங்கம் சிக்கியுள்ளது.