தமிழகம்

ஆளுநருக்கு முதல்வர் யுகாதி வாழ்த்து

செய்திப்பிரிவு

தமிழக ஆளுநர் சிஎச்.வித்யாசாகர் ராவுக்கு, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி யுகாதி வாழ்த்து தெரிவித்தார்.

தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதியை முன்னிட்டு, தமிழக ஆளுநர் சிஎச்.வித்யாசாகர் ராவுக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று மலர்க் கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பினார்.

அக்கடிதத்தில், ‘யுகாதியை கொண்டாடும் இந்த தரு ணத்தில், இந்த புத்தாண்டு தங்களுக்கும், தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் மகிழ்ச்சி யான, வெற்றியைத் தரும் ஆண்டாக இருக்க வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ என் றார்.

ஆளுநர் நன்றி

மேலும், நேற்று காலை தொலை பேசியில் ஆளுநர் வித்யாசாகர் ராவை தொடர்பு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது, வாழ்த்து தெரி வித்த முதல்வருக்கு, ஆளுநர் நன்றி தெரிவித்தார். இத்தகவல் களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT