சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் எஸ்.ஜார்ஜ் உத்தர வின்பேரில், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந் நிலையில் சென்னையில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட, திருட்டு, செயின் பறிப்பில் தொடர்புடையவர் கள் என 15 பேரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல் ஆணையாளர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.
அதன்பேரில், விக்ரம்(24), கவியரசு(30), தேவராஜ்(39), சந்திர சேகர்(22), தேவராஜ்(30), நாக ராஜன்(43), ரத்தினம்(39), விஜி(28), பாலாஜி(24), காமேஷ்ராஜ்(26), தினேஷ்(24), விக்னேஷ்குமார்(25), சந்திரசேகர் (30), செல்வகுமார்(38), பாபு(46) ஆகிய 15 பேரும் நேற்று குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.