தமிழகம்

இலவச பேருந்து பயண திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

செய்திப்பிரிவு

மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் படிப்படியாக மற்ற பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று, பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, திமுக கொறடா அர.சக்கர பாணி எழுப்பிய கேள்விக்கு போக்கு வரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்த பதில்:

மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து சலுகைச் சீட்டு திட்டம் தற்போது சென்னையில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கடந்த 24-ம் தேதி வரை, 2 லட்சத்து 53 ஆயிரத்து 536 பேர் சலுகைச் சீட்டு பெற்றுள்ளனர். இவர்கள் 71 லட்சத்து 96 ஆயிரத்து 981 முறை பயணித்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் ரூ.10.75 கோடி செலவாகியுள்ளது. இத்திட்டம் படிப்படியாக, மற்ற பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT