சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப் புக்கான ரேண்டம் எண் வெளியிடப் பட்டது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யில் மருத்துவம் (எம்பிபிஎஸ்) மற்றும் பல் மருத்துவ (பிடிஎஸ்) படிப்புகளுக்கு கடந்த 20-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இப்பல்கலைக்கழகத்தில் மருத் துவப் படிப்புக்கு 150 இடங்கள் மற்றும் பல் மருத்துவப் படிப்புக்கு 80 இடங்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று பல்கலைக்கழக பதிவாளர் மணியன் மருத்துவம், பல் மருத் துவப் படிப்புகளுக்கு ரேண்டம் எண்களை வெளியிட்டார்.
இதை தொடர்ந்து அவர் செய்தி யாளர்களிடம் கூறும்போது, “மாண வர்கள் மேல்நிலைப் படிப்பு அல் லது அதற்கு இணையான படிப் பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும், தமிழக அரசின் இட ஒதுக்கீடு விதிப்படியும் சேர்க் கைக்கான பட்டியல் தயார் செய் யப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக் கப்படுவார்கள். மாற்றுத்திறனாளி களுக்கு 3 சதவீத இடங்கள் தமிழக அரசின் விதிப்படி ஒதுக்கப்படும். முற்றிலும் இது திறந்தவெளி கலந் தாய்வு ஆகும்.
இதுகுறித்து பல்வேறு வகை யில் விளம்பரம் செய்ய உள்ளோம். ஏழை மாணவர்களுக்கு சீட் கிடைத் தால் அவர்களுக்கு கல்விக் கடன் பெற்றுத் தர நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.
மாணவர் சேர்க்கைக்கான கலந் தாய்வு நாள் பின்னர் அறிவிக்கப் படும். கலந்தாய்வு அட்டவணை மற்றும் கலந்தாய்வுக்கான அனு மதி கடிதத்தை தகுதியுள்ள மாண வர்கள் பல்கலைக்கழக இணைய தளத்தில் ஜூலை முதல் வாரத் தில் பதிவிறக்கம் செய்து கலந்தாய் வில் கலந்துகொள்ளலாம். மாண வர்களுக்கு தனியாக கலந்தாய்வு கடிதம் அனுப்பப்பட மாட்டாது என்றார்.