மத்திய அரசைக் கண்டித்து மதுரையில் ஏப்ரல் 10-ம் தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''வைகை கரை நாகரிகம் தமிழர்களின் தொன்மையான நாகரிகம் என்பதை மறைப்பதற்கு இந்திய அரசு செய்துவரும் முயற்சிகளை கண்டித்தும், வறட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் ஆகிய பேரழிவுத் திட்டங்களை எதிர்த்தும் ஏப்ரல் 10-ம் தேதி காலை 10 மணிக்கு மதுரை, புதூர் பேருந்து நிலையம் அருகே தமிழர் தேசிய முன்னணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தோழமை அமைப்புகள், தமிழர் அமைப்புகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் மாணவ அமைப்புகள் அந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்துகொள்ளும்படி வேண்டிக்கொள்கிறேன்'' என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.