தமிழகம்

முழு அடைப்பு போராட்டம் குறித்து காவல் ஆணையர் ஆலோசனை

செய்திப்பிரிவு

திமுக அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டத்தை எதிர்கொள்வது குறித்து சென்னை காவல் ஆணையர், காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

விவசாயிகளின் பிரச்சினைக ளுக்கு தீர்வு காண வலியுறுத்தி வரும் 25-ம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த திமுக அழைப்பு விடுத் துள்ளது. இதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. விவசாய சங்கங்களும் வரவேற்பு தெரிவித்துள்ளன. வணிகர் அமைப்புகளின் ஆதரவையும் திமுக கோரியுள்ளது. மேலும் சில அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

அன்றைய தினம் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தவும் திட்டமிடப் பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனைத்து தகவல்களையும் உளவு மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீஸார் சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், முழு அடைப்பின்போது பொது மக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுப்பது குறித்து சென்னை காவல் ஆணையர் கரன் சின்ஹா, சக போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

SCROLL FOR NEXT