நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி, பா.ஜ.க., மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வாழ்த்துச் செய்தியில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது:
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடனும், நிரந்தர ஆரோக்கியத்துடனும், எல்லா செல்வங்களும், நலங்களும் பெற்று, பல்லாண்டு வாழ, அன்னை பராசக்தியை பிராத்திக்கிறேன். பா.ஜ.க., சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து ஏழைகளின் துயரங்களை உணர்ந்து,
ஏழைகளோடு வாழ்ந்து, இந்தியாவில் ஈடு இணையற்ற நடிகராகவும், மனிதராகவும் உயர்ந்தவர் ரஜினிகாந்த். உயர்ந்த பிறகும் தன் கடந்த காலத்தை என்றும் நினைவில் கொண்டு வாழ்ந்தும், வாழ்வித்தும் வருகிறார் ரஜினிகாந்த். அவரது கடந்த கால பணிகளை விட எதிர்கால பணிகள் அதிகம் இருக்க பிரார்த்திக்கிறேன்.