தமிழகம்

சென்னையில் 15-ம் தேதி கருணாநிதி தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

செய்திப்பிரிவு

திமுக சட்டப்பேரவை கொறடா அர.சக்கரபாணி நேற்று வெளி யிட்ட அறிக்கை: திமுக எம்எல்ஏக்கள் கூட்டம், வரும் 15-ம் தேதி மாலை 5 மணிக்கு கட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறும்.

அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர், வரும் 16-ம் தேதி ஆளுநர் கே.ரோசய்யா உரையுடன் தொடங்குகிறது.

எப்போதும் இல்லாத அளவுக்கு வலுவான எதிர்க்கட்சியாக இருப்பதால் சட்டப்பேரவையில் எவ்வாறு நடந்துகொள்வது, ஆளுங்கட்சிக்கு எப்படி நெருக் கடி கொடுப்பது, அமைச்சர்களும், ஆளுங்கட்சி எம்எல்ஏக்களும் சீண்டினால் என்ன செய்வது என்பது பற்றி எம்எல்ஏக்களுக்கு கருணாநிதி, ஸ்டாலின், துரை முருகன் உள்ளிட்டோர் ஆலோ சனை வழங்குவார்கள் என திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

பல எம்எல்ஏக்கள் புதியவர்கள் என்பதால் அவர்களுக்கு தனியாக ஆலோசனைகள் வழங்கப்படும் எனவும் திமுக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT