சென்னை நகரின் சிறப்புகளைப் போற்றும் ‘சென்னை வாரம்’ என்ற விழா வரும் 21-ம் தேதி தொடங்குகிறது.
இது தொடர்பாக ‘சென்னை வாரம்’ விழாக் குழு சார்பில், சென்னை வரலாற்று ஆய்வாள ரான எஸ்.முத்தையா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தன்னார்வலர்களாக சேர்ந்து ‘சென்னை வாரம்’ என்ற விழாவை ஆகஸ்ட் 21 முதல் 27 வரை நடத்துகின்றனர். நாம் சென்னையில் வாழ் கிறோம். சென்னைக்கு பல்வேறு வரலாற்று சிறப்புகள் உள்ளன. அதைப் போற்றும் வகை யில் இந்த விழாவை கொண்டாடுகிறோம். நாங்கள் விழா அறிவிப்பாளர்கள் மட்டுமே. சென்னையைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும், எந்த அமைப்பைச் சேர்ந்தவர்களும் தங்களால் முடிந்த வகையில் இந்த விழாவை நடத்திக் கொள்ளலாம்.
இந்த ஒரு வாரத்தில் சென்னையின் சிறப்பு களைக் கூறும் சொற்பொழிவுகள் 30 இடங் களிலும், சென்னையில் உள்ள பாரம்பரிய கட் டிடங்கள் மற்றும் காணாமல் போன கட்டிடங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடைபயணங்கள் 18 இடங்களிலும், சென்னையின் சிறப்புகளை படம் எடுக்கும் நடைபயணம் 3 இடங்களிலும், சென்னையின் பாரம்பரிய உணவுகளை தெரிந்துக்கொள்ளும் நடைபயணம் 7 இடங்களிலும், சென்னையில் உள்ள இயற்கை சூழலை தெரிந்துக்கொள்ளும் நடைபயணம் 8 இடங்களிலும் நடைபெறுகிறது.
சென்னை வார விழாவில், நடிகர் மோகன் ராமன் ‘தமிழ் சினிமாவில் மெட்ராஸ் பாஷை’ என்ற தலைப்பில் பேசுகிறார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டிகளும் நடைபெறுகிறது. என்னென்ன நிகழ்வுகள் நடைபெறுகின்றன என்பதை www.themadrasday.in என்ற இணையதளத்திலும், Madras Week என்ற கைபேசி செயலியிலும் பார்க்கலாம்.
இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு சென்னை மீது மதிப்பும், மரியாதையும் ஏற்படுவதுடன், சென்னையின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வும் ஏற்படும். சென்னை மாநகரில் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் குழுக்களாக மாறும் வாய்ப்பு ஏற்படும் என்று கூறினார்.
மூத்த பத்திரிகையாளர்கள் சுசீலா ரவீந்திரன், வின்சென்ட் டிசோசா, பிரஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியாவின் இயக்குநர் சஷி நாயர், வரலாற்று ஆய்வாளர் ஸ்ரீராம் உடனிருந்தனர்.