தமிழகம்

அரவக்குறிச்சி, தஞ்சாவூருக்கு பிறகு மூன்றாவது முறையாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது தமிழகத்துக்கு தலைகுனிவு: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கருத்து

செய்திப்பிரிவு

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ் சாவூர் தொகுதிகளைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆர்.கே. நகரில் தேர்தல் ரத்து செய்யப் பட்டிருப்பது தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் பெரும் தலை குனிவாகும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி.

திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் வாக்குக்கு பணம் கொடுக்கப்படும், அது வாக்காளர் களால் வாங்கப்படும் என்பதும் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப் பட்டிருப்பதன் மூலம் மூன்றாவது முறையாக பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளிதழ் எடுத்த கருத்துக் கணிப்பில் 80 சதவீத வாக்காளர் கள் வாக்குக்கு பணம் வாங்குவதில் தவறில்லை என தெரிவிப்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய செயலாகும். அரசியல் கட்சிகளும் திருந்த வேண்டும், மக்களும் திருந்த வேண்டும்.

முன்பு பிஹார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடத்துவது தான் மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஆனால், அங்கு தற்போது எந்த பிரச்சினையும் இல்லை. தமிழகம்தான் அந்த அளவுக்கு மோசமாகி விட்டது.

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இலவச திட்டங்கள் அறிவிக்கப்படுவதையும், வாக் குக்கு பணம் அளிப்பதையும் ஒப்பிடக்கூடாது.

ஒரு அரசு இலவசங்களை மக்களின் வரிப் பணத்திலிருந்து வழங்குகிறது. ஆனால், வாக் குக்கு பணம் என்பது ஊழ லில் சம்பாதித்த பணத்தி லிருந்து வழங்கப்படுகிறது. இந்த இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது.

வாக்குக்கு பணம் வழங்கும் வேட்பாளர்களைத் தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்தின் விதிகளில் தற்போது இல்லை.

ஆனால், தமிழகத்தில் மூன்றாவது முறையாக தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பதால் பணம் வழங்கிய கட்சிகளின் அங்கீ காரத்தை ரத்து செய்வது குறித்து தேர்தல் ஆணையம் முடிவுவெடுக்க வேண்டிய நேரம் தற்போது வந்துள்ளது.

ஆனால், பணம் கொடுத்த வர்களும், அதை வாங்கிய வர்களும் எப்போதும் ஒப்புக் கொள்ளப்போவதில்லை. இந்த நிலை மாற வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT