மாத ஊக்கத் தொகை ரூ.5 ஆயிரம், ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி கிராம கோயில் பூசாரிகள் பேரவை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை சேப் பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று நடைபெற்றது. இதில் கிராம கோயில் பூசாரிகள் பேரவை நிறுவனரும் நிர்வாக அறங்காவலருமான வேதாந்தம், அறங்காவலர் கோபால்ஜி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய வேதாந்தம், “தமிழகம் முழுவதும் 6 லட்சத்துக்கும் அதிகமான பூசாரி கள் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க தமிழக அரசு முன்வர வேண்டும். மாதந் தோறும் பூசாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். நலவாரிய சலுகைகள் மூலம் கல்வி மற்றும் திருமணத்துக்கு குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும்.
ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்” என்றார்.