பூசாரியை தற்கொலைக்கு தூண்டி யதாக, அமைச்சர் ஓ.பன்னீர்செல் வம் தம்பி ராஜா மீது தொடரப்பட்ட வழக்கில் சேலம் துணை காவல் ஆணையர் நீதிமன்றத்தில் சாட்சி யம் அளித்தார்.
தேனி மாவட்டம், டி.கள்ளிப்பட் டியைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவரது மகன் எஸ்.நாகமுத்து பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர் கோயில் பூசாரியாக இருந்தார். இவர், 2012 டிசம்பர் 8-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.
தனது தற்கொலைக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா உட்பட 7 பேர் காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்தார். இதுகுறித்து பெரியகுளம் போலீ ஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை திண்டுக் கல் மாவட்ட முதன்மை நீதிமன் றத்தில் நடைபெறுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் பாண்டி என்பவர் இறந்துவிட்டதால், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது மீதம் உள்ள ஓ.ராஜா, மணிமாறன், லோகு, ஞானம், சிவக்குமார், சரவணன் ஆகிய 6 பேர் ஆஜராகினர்.
சம்பவம் நடைபெற்றபோது பெரியகுளம் டிஎஸ்பியாக பணியாற் றிய செல்வராஜ், தற்போது சேலம் துணை காவல் ஆணையராக பணிபுரிகிறார். இவர் நேற்று முன் தினம் ஆஜர் ஆகாததால் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதை யடுத்து செல்வராஜ் நேற்று ஆஜரானார்.
அவரிடம் ராஜா தரப்பு வழக்கறி ஞர் எம்.கண்ணப்பன் விசாரணை செய்தார். செல்வராஜின் சாட்சியம், குறுக்கு விசாரணை ஆகியவை பதிவு செய்யப்பட்டன. பின்னர் விசாரணையை 3-ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்து நீதிபதி ஆர்.பூர்ணிமா உத்தரவிட்டார். ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி உமா உட்பட போலீஸ் அதிகாரிகள் இன்று சாட்சியமளிக்க உள்ளனர்.