மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாள் விழா அதிமுகவினரால் தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.
அதிமுக தலைமை அலு வலகத்தில் அலங்கரித்து வைக் கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்துக்கு அதிமுக அவைத் தலைவரும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான கே.ஏ.செங் கோட்டையன் தலைமையில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள், மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மலர்தூவி மரி யாதை செலுத்தினர்.
பின்னர், ஜெயலலிதா பிறந்தாள் சிறப்பு மலரை கட்சியின் பொருளாளரும் வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் வெளி யிட, சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் பெற்றுக்கொண்டார்.