திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதி வாளருமான என்.கே.விஸ்வநாதன் உடல்நிலை பாதிப்பால் சென்னை யில் நேற்று காலமானார். அவ ருக்கு வயது 75. இவருக்கு ராஜேஸ்வரி என்ற மகள் உள்ளார். அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெறுகிறது.
‘சட்டம் என் கையில்’, ‘கல்யாண ராமன்’, ‘மனைவி சொல்லே மந்தி ரம்’, ‘உரிமை’, உள்ளிட்ட 130-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் ஒளிப் பதிவாளராக பணியாற்றியுள்ளார். ‘பெரிய வீட்டு பண்ணக்காரன்’ படத் தின் மூலம் இயக்குநராகவும் அறி முகமான அவர், பின்னர் ‘இணைந்த கைகள்’, ‘நாடோடி பாட்டுக்காரன்’, ‘பெரிய மருது’, ‘வர்றார் சண்டியர்’, ‘ஜெகன்மோகினி’ உள்ளிட்ட 14 படங்களை இயக்கியுள்ளார்.