அதிமுகவின் இரு அணிகளாலும் தமிழகத்தில் நல்லாட்சி தர முடியாது என நாகர்கோவிலில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: புதிய அரசால் தமிழ கத்துக்கு எந்த பயனும் ஏற்படப் போவது இல்லை. 50 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்தும் கழகங்கள் எதுவும் செய்யவில்லை. தற்போது மக்கள் புதிய தேடலை நோக்கி செல்லத் தொடங்கி உள்ளனர். அது பாஜகதான். அதனால்தான் தமிழகத்தில் நல்லாட்சி தர முடியும்.
அண்மைக்கால நிகழ்வுகளால் தமிழகத்தின் தலை எழுத்தை நினைத்து வெட்கத்தோடு தலைகுனிய வேண்டிய நிலை உள்ளது. தமிழகத்தில் இதுவரை ஏற்பட்டிராத அரசியல் சூழல் ஏற்பட்டது. தற்போதுதான் தமிழகத் தில் நீண்ட நாட்களாக இருந்த ஸ்திரமற்ற நிலை முடிவுக்கு வந் துள்ளது. ஆளுநர் பொறுமையாக வும், ஆழமாகவும் யோசித்து உறுதி யான முடிவை எடுத்துள்ளார்.
எங்களைப் பொறுத்தவரை அதிமுகவின் இரு தரப்புக்கும் ஆதரவு இல்லை. காரணம் இரு தரப்பினராலும் நல்லாட்சியைத் தர முடியாது என்றார்.