சென்னை கொளத்தூர் பகுதி திமுக மற்றும் இளைஞரணி சார்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா, பெரியார் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பெண்களுக்கு பொங்கல் பை, கரும்பு வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், ‘‘இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ளோம். இந்தத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்து கருணாநிதியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். மத்தியில் நிலையான, நேர்மையான, தமிழகத்துக்கு பயன்படக்கூடிய வகையிலே மதசார்பற்ற ஒரு ஆட்சி உருவாக வேண்டும்’’ என்றார்.