தமிழகம்

சேகர் ரெட்டி கூட்டாளிகளின் 12 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

செய்திப்பிரிவு

சேகர் ரெட்டி கூட்டாளிகள் 2 பேரின் ரூ.12 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர்.

பொதுப்பணித்துறை ஒப் பந்ததாரரும், தொழிலதிபருமான சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாசலு ஆகியோர் வீடுகளில் கடந்த டிசம்பர் மாதம் வருமான வரித்துறை அதிகாரிகளும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் சோதனை நடத்தினர். சென்னை, வேலூரில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.147 கோடி பணம், 178 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.147 கோடி பணத்தில் ரூ.34 கோடி புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஆகும்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சென் னையை சேர்ந்த அசோக் எம்.ஜெயின், மகாவீர் கிரானி ஆகியோர் சேகர் ரெட்டிக்கு பணத்தை மாற்றிக் கொடுத்தது தெரிந்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து ரூ.6 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகளை சேகர் ரெட்டிக்கு மாற்றிக் கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரின் வீடுகளிலும் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.10 கோடி பழைய ரூபாய் நோட்டுகள், 6.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

அதைத் தொடர்ந்து அசோக் எம்.ஜெயின், மகாவீர் கிரானி ஆகிய இருவரையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்நிலையில் அசோக் எம்.ஜெயின், மகாவீர் கிரானி ஆகியோரின் ரூ.12 கோடி மதிப் புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முதல் முடக்கி வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT