தமிழகம்

தமிழ் மொழியின் வைர மகுடம் திருக்குறள்: ஆளுநர் ரோசய்யா புகழாரம்

செய்திப்பிரிவு

தமிழ் மொழியின் வைர மகுடம் திருக்குறள் என்று தமிழக ஆளுநர் ரோசய்யா புகழாரம் சூட்டி யுள்ளார்.

ஹரித்துவாரில் கங்கை நதிக் கரையில் திருவள்ளுவர் சிலை வரும் 29-ம் தேதி நிறுவப்பட வுள்ளது. இதுகுறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற் படுத்தும் வகையில் பாஜக எம்பி தருண் விஜய் மற்றும் தமிழ் ஆர்வலர்களைக் கொண்ட குழு வினர் கன்னியாகுமரியில் இருந்து ஹரித்துவார் வரை பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக சென்னை வந்துள்ள திருவள்ளுவர் கங்கா பயணத்தை வழியனுப்பும் விழா மெரினா கடற்கரையில் நேற்று நடந்தது. இந்த பயணத்தை தொடங்கிவைத்து ஆளுநர் கே.ரோசய்யா பேசும்போது, ‘‘உலகில் உள்ள மனிதர்களை நல்வழிப்படுத்தி செல்வதில் சிறந்த நூலாக திருக்குறள் இருக்கிறது. தமிழ் மொழியின் வைர மகுடம் திருக்குறள். இந்த நூல் உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. நம் நாட்டையும் கடந்து உலகில் உள்ள அனைத்து நாட்டு மக்க ளுக்கும் திருக்குறளின் சிறப்பு அம்சங்களை கொண்டு சேர்க்க வேண்டும். குறிப்பாக, இளைஞர் களிடம் திருக்குறளின் சிறப்புகளை கொண்டு செல்ல வேண்டும்’’ என்றார்.

முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி பேசும்போது, “திருவள்ளுவரையோ, திருக் குறளையோ யாரும் ஏமாற்ற முடியாது. அவருக்கு பிரச்சாரம் தேவையில்லை. குறிப்பிட்ட மதத் துக்கோ, மொழிக்கோ அவர் சொந்தமில்லை. திருக்குறளின் கருத்துக்களை புரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.

பாஜக எம்பி தருண்விஜய் பேசும்போது, “ஜாதி, மதம், மொழி கடந்து திருக்குறள் பொது மறையாக இருக்கிறது. தமிழர் களுக்கு மட்டும் திருவள்ளுவர் சொந்தமானவர் அல்ல. திருவள்ளு வர் இந்தியாவின் அடையாளம். திருவள்ளுவர் குறித்து மத்திய பல்கலைக்கழகங்களில் இருக்கை ஆய்வு அமைக்க வேண்டுமென பிரதமரிடம் வலியுறுத்தவுள்ளேன்’’ என்றார்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது, “நாடுமுழுவதும் பள்ளி மாணவர் களிடம் திருக்குறளை பயிற்றுவிக்க வேண்டும் என தருண்விஜய் எம்பி வலியுறுத்தியவுடன் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது. இதேபோல், பாரதியார் பாடல்களை நாடுமுழுவதும் உள்ள மாணவர்களிடம் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சர்வதேச யோகா தினம் கொண்டாடுவது போல், வள்ளுவரின் பிறந்த தினத்தையும் உலகம் முழுவதும் கொண்டாட வேண்டிய நாள் வரும்.’’ என்றார்.

செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பேசும்போது, “திருக்குறளை சீனம், உருது மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.98 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டது. திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டுமென சட்டப் பேரவையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் காங் கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், மதிமுக பொதுசெயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன், கவிஞர் வைரமுத்து, ஆடிட்டர் குருமூர்த்தி, தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எஸ்.ராமசந்திரன் எம்பிக்கள் சுதர்சன நாச்சியப்பன், உதயகுமார் உட்பட பலர் கொண்டனர்.

SCROLL FOR NEXT