மதுரை மத்திய தொகுதியில் சீல் வைக்கப்பட்ட சமுதாயக் கூடத்தில் இருந்த பிளாஸ்டிக் சேர்கள்.

 
தமிழகம்

மதுரை மத்திய தொகுதியில் 210 பிளாஸ்டிக் சேர்கள் பறிமுதல்: திமுகவினர் பதுக்கி வைத்திருந்ததாக புகார்

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை மத்​திய தொகுதி திமுக வேட்​பாளர் அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜனின் ஆதர​வாளர்​கள் சமு​தாயக் கூடத்​தில் பிளாஸ்​டிக் சேர்​களை பதுக்கி வைத்து வாக்​காளர்​களுக்கு விநியோகிப்​ப​தாக வந்த புகாரையடுத்து பறக்​கும் படை​யினர் 210 பிளாஸ்​டிக் சேர்​களை பறி​முதல் செய்​தனர்.

சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்​டு, மதுரை மாவட்​டத்​தில் 3 மாதங்​களுக்கு முன்​பிருந்தே திமுக அமைச்​சர்​கள், எல்​எல்​ஏக்​கள் ஆகியோர் சில்​வர் குடம், டிபன் பாக்​ஸ், ஹாட் பாக்​ஸ், சேலைகள் உள்​ளிட்ட பொருட்​களை வாக்​காளர்​களுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது மதுரை மத்​திய தொகுதி எம்​எல்​ஏ​வும், அமைச்​சருமான பழனிவேல் தியாகராஜன், இது​வரை எந்தவிதமான பரிசுப் பொருட்களோ, பணமோ வழங்​கிய​தில்​லை.

          

ஆனால், வழக்​கத்​துக்கு மாறாக தற்​போது தேர்​தல் தேதி அறி​விப்புக்கு சில நாட்​களுக்கு முன்பு தொகுதி மக்​களை சந்​தித்த பழனிவேல் தியாக​ராஜன் பிளாஸ்​டிக் சேர்​கள் வழங்​கி​னார். அதற்குப் பின்​னர் தேர்​தல் தேதி அறிவிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் நேற்று மதுரை மத்​திய தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்​பாளர் கா.அப்​துல் ஹக்​கீம், மத்​திய தொகு​திக்​குட்​பட்ட வடக்கு பெரு​மாள் மேஸ்​திரி வீதி​யில் உள்ள சமு​தாயக் கூடத்​தில் திமுக​வினர் சேர்​களை பதுக்கி வைத்து வாக்​காளர்​களுக்கு விநி​யோகிப்​ப​தாக தேர்​தல் ஆணை​யத்​தை இலவச புகார் எண் (டோல் ஃபிரீ நம்பர்) மூலம் தெரி​வித்​தார்.

இதற்கு தேர்​தல் பறக்​கும் படை​யினர் சம்பந்தப்பட்ட சமு​தாயக்​கூடம் பூட்டி சீல் வைக்​கப் ​பட்​டுள்​ள​தாகத் தெரி​வித்​தனர். அதற்கு நாம் தமிழர் கட்​சி​யினர், திமுகவினரே சீல் வைத்து தேவைப்​படும்​போது திறந்து சேர்​களை வழங்​கி வருவ​தாகத் தெரி​வித்​தனர்.

அதற்கு அதி​காரி​கள் மறுப்பு தெரி​வித்​தனர். இதையடுத்து, சேர்​களை பறி​முதல் செய்​யா​விட்​டால் போராட்​டத்​தில் ஈடு​படு​வோம் என தெரி​வித்​த​தால், பறக்​கும் படை​யினர், மாநக​ராட்சி துணை ஆணை​யர், போலீ​ஸார் வந்து சீலை உடைத்து திறந்து பார்த்​தனர்.

அப்​போது அங்​கிருந்த 210 சேர்​களை பறி​முதல் செய்​தனர். இதுகுறித்து நாம் தமிழர் கட்​சி​யினர் கூறுகை​யில், திமுக​வினர் சீல் வைத்த துணி​யில் உதயநிதி படம் உள்​ளது. பறக்​கும் படை​யினரிடம் புகார் தெரி​வித்​தும் நடவடிக்கை எடுக்​கத் தயங்​கு​கின்​றனர் என்​றனர்.

SCROLL FOR NEXT