ஆசிரியர் தினத்தையொட்டி தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யா சா கர் ராவ், முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
ஆசிரியரும் முன்னாள் குடி யரசுத் தலைவருமான டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள், ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாடு முழுவதும் உள்ள ஆசிரிய பெருமக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டர் ராதாகிருஷ்ணன் இந்திய சமூகத்துக்கு, குறிப்பாக ஆசிரி யர் சமுதாயத்துக்கு சிறந்த முன் மாதிரியாக திகழ்ந்தவர். கல்வி குறித்த அவரது பார்வைகள் உலகத்தரத்துக்கு இணை யான வை. இன்றைக்கு பலர் நல்ல நிலையில் இருக்க ஆசிரியர்களே காரணம். அவர்களுக்கு மரியா தையும், நன்றியும் செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். உலகள வில் இந்தியாவைத் தலைசிறந்த நாடாக்குவதற்கு ஆசிரியர்கள் தங்களைத் தாங்களே மறுசீரமைத் துக் கொண்டு புதிய முறைகளை கற்றலில் புகுத்தி மாணவர்களின் கல்விக்கு வலிமையான அடித் த ளமிட வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா: உன்னதமான ஆசிரியர் பணியைத் தொடங்கி, இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்து, தமது அறிவுத் திறனால் உலகம் போற்றும் தத்துவ மேதையாக விளங்கிய டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் திங்கள் 5-ம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பாரதியாரின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், தமிழகத் தில் உள்ள அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பள்ளிக் குழந்தைகளுக்கான பல்வேறு நலத் திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தப் படுகிறது. அதே வேளையில், ஆசிரியர் நலன் காக்கும் வகையில் 74,316 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியது, சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளியில் ரூ.6 கோடி செலவில் 2 ஆசிரியர் இல்லங்கள் அமைத்தது, இடமாறுதலில் வெளிப்படையான கலந்தாய்வு என ஆசிரியர்களின் நல்வாழ்வுக்காக எனது தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்ப டுத்தி வருகிறது.
நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக தற்போது வழங் கப்படும் ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளேன். அழிவிலா செல்வமான கல்வியை ஊட்டும் அனைத்து ஆசிரியர்களுக் கும், சிறந்த கல்விப் பணி ஆற்றி நல்லாசிரியர் விருது பெறுவோ ருக்கும் எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: ஏழைக் குடும்பத்தில் பிறந்து, ஆசிரியராக பணி செய்து, இந்தியாவின் முதல் குடிமகன் என்ற உன்னத நிலையை அடைந்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். அவரது பிறந்த நாள்தான் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் தமிழக அளவிலும், தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருது பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது பாராட்டுகளையும்,வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியர்களின் நிலையை உயர்த்தவும், அவர்களின் உதவியுடன் தமிழகத்தில் தரமான, கல்வியை வழங்கவும் இந்த நாளில் உறுதி ஏற்போம்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்:
ஆசிரியர்கள் நாட்டின் முன்னேற்றத்துக்காகவும், மாணவர்களின் எதிர்காலத்துக்காகவும் தங்களின் வாழ்நாளின் பெரும் பகுதியை தியாகம் செய்து அயராது உழைக்கின்றனர். அவர்களை நினைவு கூற வேண்டிய முக்கியமான தினம் ஆசிரியர் தினம் ஆகும். அவர்களை மதித்துப் போற்றி பாராட்ட வேண்டியது நமது கடமையாகும். ஆசிரியர் சமுதாயத்தின் நலன்களைப் பேணி காப்பதிலும், அவர்களின் கோரிக்கைகளுக்காக குரல் கொடுப்பதிலும் எப்போதும் போல திமுக உறுதுணையாக இருக்கும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்:
மாணவர்களின் ஏற்றத்துக்கு ஏணியாக திகழும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது ஆசிரியர்களின் நிலை மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது. 7-வது ஊதியக்குழு நடைமுறைக்கு வந்த பிறகும் ஊதிய முரண்பாடுகள் உள்ளன. ஆசிரியர்களின் நிலையை உயர்த்தவும், அவர்களின் உதவியுடன் தமிழகத்தில் தமிழ்வழிக் கல்வியை வழங்கவும் இந்த நல்ல நாளில் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:
சமூகத்தின் மேன் மைக்கும், நாட்டின் உயர்வுக்கும் அடித்தளமான கல்வியை வழங்கும் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தின நல்வாழ்த்து களைத் தெரிவித்துக்கொள்கிறேன். சட்டப்பேரவைத் தேர்தலின்போது தமிழக முதல்வர் அளித்த வாக்குறுதிகளைச் செயல்படுத்தி, தமிழகத்தில் அனைத்து ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.