எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கைத் தொடர்
பொதிகை தொலைக்காட்சியில் வாரந்தோறும் சனிக்கிழமை (இன்று) இரவு 9.30 மணிக்கு இசைமேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி யின் வாழ்க்கை வரலாற்றுத் தொடரான ‘குறையொன்றுமில்லை’ ஒளிபரப்பாகி வருகிறது. ‘தி இந்து’ நாளிதழுடன் இணைந்து பொதிகை தொலைக்காட்சி இந்நிகழ்ச்சியை வழங்குகிறது.
இந்த வாரம் ஒளிபரப்பாகவுள்ள 47-வது அத்தியாயத்தில் இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு கல்கி சதாசிவம் அவர்களின் தேசப் பற்று மற்றும் அவர் தேசிய நீரோட் டத்தில் பங்கு பெற்றது குறித்த சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். மேலும் 1960-களில் பரபரப்பை ஏற்படுத்திய ‘அஷ்ட கிரக சேர்க்கை’ பற்றிய தகவல்களும் எம்.எஸ் அவர்களின் அபூர்வ பாடல்களும் இடம்பெறும்.
இந்நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக 1966-ல் ஐ.நா சபையில் எம்.எஸ் அவர்கள் நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சேரி பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பு இடம் பெறும். இதன் மறுஒளிபரப்பு செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.